Author Topic: ~ பிரட் போண்டா ~  (Read 345 times)

Offline MysteRy

~ பிரட் போண்டா ~
« on: January 21, 2016, 08:45:43 PM »
பிரட் போண்டா



தேவையானப் பொருட்கள் :

பிரட்: 1 பாக்கெட்
பெரிய வெங்காயம்: பொடியாக நறுக்கியது சிறதளவு
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எ‌ண்ணெ‌‌ய்: 1/4 லிட்டர்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து, அத்துடன் இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
பின் உதிர்த்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி ஆறவிடவும். சூடு ஆறியதும் எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும்.
பிரட் துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்துவிட்டு அதில் மசால் உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை நான்கைந்தாக போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறசுவையாக இருக்கும்.