Author Topic: ~ கேரள ஆப்பம் ~  (Read 310 times)

Online MysteRy

~ கேரள ஆப்பம் ~
« on: January 19, 2016, 09:40:13 PM »
கேரள ஆப்பம்



தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்,
தேங்காய்- 1/2 கப் (துருவியது)
இளநீர் – 2.
உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது?

முதலில் அரிசியை 1 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, ஆப்பமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, பின் ஒரு கரண்டி மாவு ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை எடுத்து, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் மூடி, பின் அதனை எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் ஆப்பம் ரெடி!!! இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.