Author Topic: ~ க்ரீன் சிக்கன் குழம்பு ~  (Read 424 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
க்ரீன் சிக்கன் குழம்பு



தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 கப்
கொத்தமல்லி – 2 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
சீனி – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
ஏலக்காய் – 5
வரமிளகாய் – 2
தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, உப்பு, சீனி, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கனை போட்டு மசாலா நன்கு சேரும் வரை பிரட்டி, அதில் கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு, அடுப்பை குறைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
10 நிமிடங்களின் பின்பு குக்கரை இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் க்ரீன் சிக்கன் குழம்பு தயார்!