Author Topic: ~ குடல் சார்ந்த நோய்களை குணமாக்கும் நறுவல்லி ~  (Read 454 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226754
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குடல் சார்ந்த நோய்களை குணமாக்கும் நறுவல்லி



நாம் அன்றாடம் பார்க்கும் பல தாவரங்கள் நம்மை வாழவைக்கும் மூலிகையாக இருந்து வருகிறது. எப்பொழுதும் பசுமையாக இருக்கும் மரம். இதன் இலைகள் பளபளப்பான நீள்வட்ட அமைப்பை கொண்டது. பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவ பயன்கள் உடையவை. பழங்காலத்தில் சீப்புகள் இந்த மரத்தில்தான் செய்வார்கள். இதன் பழத்தை சுவைக்கும்போது பிசுபிசுப்பு சுவையுடன் இருப்பதால் இதை பாமரமக்கள் மூக்குசளி பழம் என்று அழைப்பார்கள்.

கரும வினை எனப்படும் நோய்களில் ஒன்றுதான் மூல நோய். இவர்கள் 10 கிராம் கொழுந்து இலைகளை மென்மையாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டுவர எந்த வகை மூலமானாலும் தீரும். இளம்பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பருவகாலத்தில் முகத்தில் தோன்றும் பருக்கள் அவர்களின் அழகை கெடுப்பதுடன் வடுக்களையும் ஏற்படத்தி விடும். இவர்கள் இலைசாற்றை முகப் பருவின் மேல் பூசினால் பருக்கட்டிகள் உடைந்து வடுக்கள் இல்லாமல் ஆறும்.
நெஞ்சில் ஏற்படும் சளி, நீர்சுருக்கு எனப்படும் சிறுநீர் பிரச்சனை, குடல் சார்ந்த நோய்கள், நீண்ட நாட்களாக உள்ள மலச்சிக்கல் ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் தீரும். ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நறுவல்லி பட்டை சாற்றில் 50 மிலி அளவு எடுத்து அதே அளவு தேங்காய்பால் கலந்து காலை மாலை குடித்து வந்தால் கடும் வயிற்று வலி தீரும். இதன் விதையை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தோல் நோய்களுக்கு தடவி வர பலன் கிடைக்கும்.
சில ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தளர்வு ஏற்படும். மேலும் அதிகப்படியான சூட்டினால் கோழை உருவாகி மூச்சியிரைப்பு உண்டாகும். இவர்கள் பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிட இருமல் தீரும். கோழையை அகற்றி ஆண்மையை பெருக்கும். சிலர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அருகில் நெருங்கி பேசினால் வாய் நாற்றம் தாங்காது.
இவர்கள் வேர்பட்டையை சிதைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அதில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், தொழுநோய், தோல்வியாதிகள், உடல்எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, மண்ணீரல் வீக்கம், வாய்ப்புண், பல்லாட்டம் நீங்கும். இப்பழம் குளுமை குணம் கொண்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதை மருந்தாக எடுத்து கொள்ளலாம். பழத்தை அளவோடு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.