Author Topic: ~ தேக்கு இலையின் மகத்துவங்கள்! ~  (Read 2471 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேக்கு இலையின் மகத்துவங்கள்!



வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.
ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.

தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.

மருத்துவ பயன்கள்

தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.

இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்- தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம். பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது. இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.

நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.

சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து

தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும். இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும். இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது.