Author Topic: ~ காயத்தோள தோரன் ~  (Read 565 times)

Online MysteRy

~ காயத்தோள தோரன் ~
« on: January 15, 2016, 09:14:22 PM »
காயத்தோள தோரன்



வாழைக்காய் தோல் நறுக்கியது – 3 கப்,
சிவப்புக் காராமணி – 3/4 கப்,
மோர் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
பச்சைமிளகாய் – 1,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.


தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உடைத்த உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் -1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் கிள்ளியது – 2,
கறிவேப்பிலை – சிறிது.

சிவப்புக் காராமணியை 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்து கழுவி வைக்கவும். வாழைக்காய் தோலையும் 10-15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வைக்கவும். வாழைக்காய் தோலை ேமாரில் போட்டு வைத்து சமைப்பதற்கு முன் நன்றாக அலசி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு, பின் வாழைக்காய் தோல், மஞ்சள்தூள், 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஃப்ரஷர் குக்கரில் 3 விசில் விடவும். பிறகு தண்ணீரை வடித்து வைக்கவும். தேங்காய், பச்சைமிளகாயை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் வேக வைத்த தோல், உப்பு, காராமணி சேர்த்து நன்கு கலக்கவும். 6 முதல் 7 நிமிடம் வதக்கவும். அரைத்த தேங்காயை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் இறக்கவும்.