Author Topic: ~ வெஜிடபிள் ராகி களி ~  (Read 344 times)

Offline MysteRy

~ வெஜிடபிள் ராகி களி ~
« on: January 15, 2016, 09:11:15 PM »
வெஜிடபிள் ராகி களி



ராகி மாவு – 1 கப்,
தண்ணீர் 31/2 கப்,
கேரட், பீன்ஸ், கத்தரி,
சின்ன வெங்காயம்,
பீர்க்கங்காய்,
புடலை, மஞ்சள் பூசணி,
வெள்ளை பூசணி,
அவரைக்காய்,
உருளைக்கிழங்கு,
முள்ளங்கி,
நூல்கோல், டர்னிப்,
தக்காளி – 1 கப் (எல்லாம் சேர்ந்து பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் – 2,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு.

அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக அரிந்த காய்கறிகளை போட்டு வதக்கி, காய்கள் வதங்கியதும் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் ராகி மாவை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து, காய்கறி கலவையில் விட்டு நன்றாக கிளறவும். மிதமான தீயில் 10 நிமிடம் வேக விட்டு பொன்னிறமாக வந்ததும் இறக்கி பரிமாறவும். அப்படியே சாப்பிடலாம். தயிருடனும் சாப்பிடலாம்.