Author Topic: ~ கொங்குநாடு தால் ரெசிபி ~  (Read 290 times)

Online MysteRy

கொங்குநாடு தால் ரெசிபி



தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு… தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பூண்டு – 5 பல் (தட்டியது) கறிவேப்பிலை – சிறிது நெய் – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும். பிறகு குக்கரில் உள்ள பருப்பை லேசாக மசித்து பின் வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கொங்குநாடு தால் ரெசிபி ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.