Author Topic: ~ மைதா போண்டா ~  (Read 318 times)

Offline MysteRy

~ மைதா போண்டா ~
« on: January 05, 2016, 07:08:07 PM »
மைதா போண்டா



தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 கப்
இட்லி மாவு – 1 /2 கப்
பெரிய வெங்காயம் – 1 /2
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
கருவேப்பிலை – 10 இலைகள்
மல்லிதழை – 1 /4 கட்டு
எண்ணெய் – பொரிப்பதற்கு
சோடா உப்பு – சிறிது

செய்முறை:

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கியவற்றுடன் மைதா மாவு, இட்லி மாவு, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது லூசாக இருக்க வேண்டும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
போண்டாவின் நடுப்பகுதி கடினமாக இருந்தால், மேலும் சிறிது தண்ணீர் தெளித்து லூசாக பிசைந்து கொள்ளவும்.