Author Topic: உன் கண்களில் உறங்கவேண்டும்  (Read 1157 times)

Offline SweeTie

காற்றிலே  பறந்து  வந்து உன் ''
கண்களில்  துயில் கொள்ளவேண்டும்
காலாற நடக்கவேண்டும்  உன்
தோளோடு  தோள்  சேர்த்து
மூங்கில் காற்றிலே வரும்  உன்
மூச்சு சுவாசத்தை
உள்வாங்கி உணரவேண்டும்   உன்
நிழலோடு  என் நிழல் சேர்த்து
ஒன்றாகி உன்னுள் மறையவேண்டும்  உன்
அறிவென்னும் அகராதியில்
முதலெழுத்து எனதாயிருக்கவேண்டும்  உன்
கனவிலும் நினைவிலும்   நீ
கொடுக்கும் கரும்பான முத்தங்கள்
மாற்று குறையாமல் இருக்கவேண்டும்
வாழ்வில் பிரிவென்னும்  சொல்லை    நாம்
நினைக்காமல் இருக்கவேண்டும்.     
« Last Edit: January 09, 2016, 01:42:22 AM by SweeTie »

Offline Maran




அழகான வரிகள் தோழி  :) :)


 உங்கள் காதலுக்குரியவர் மிகவும் கொடுத்துவைத்தவர் தான் போங்க!....  :)  :)




« Last Edit: January 05, 2016, 07:11:42 PM by Maran »

Offline JoKe GuY

மிக அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
vaahvil pirivendra sollai naam ninaikamal irukka vendum ... sweetie semmaya irukku :P

AnonYmous

  • Guest
ingu kathalil unnai minja ver oruvar illai sweetie, vaazhatum unn kadhal valaratum unn kavidhaigal  :) :) :)

Offline SweeTie

தோழர்கள்  மாறன்  ஜோக்  ராம்   அனோனி  நன்றிகள் பல.
உங்கள் வாழ்த்துக்கள்  எங்களை  வாழ வைக்கும்.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எழுத்துப்பிழைகளில் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் !!

வாழ்த்துக்கள் !!

Offline SweeTie

என் கண்களுக்கு  எழுத்து பிழைகள் எதுவும் தெரியவில்லை.  நீங்கள் நக்கீரர் பரம்பரையில்
உள்ளவர் போல் தெரிகிறதே.   எவ்விடத்தில்   பிழை என்று சுட்டிக்காட்டுங்கள்.   திருத்திக் கொள்கிறேன் .  நன்றி வணக்கம். 

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கமுக்கமாய் திருத்தம் புரிந்துவிட்டு
உறுத்தம்(ல்)  கொள்வதை தவிர்ப்பதாய்
சற்றே சாமர்த்தியமாய் நிறுத்தம் புரிந்து
பொருத்தமாய் எனை வருத்திட
நக்கீரர் பரம்பரை என்று  உரைத்தது 
வருத்தம் ....

Offline SweeTie

சூட்சுமம் தெரிந்த  சகுனி
கமுக்கமாய்  பகடையை
அமுக்கும்  சாமர்த்தியம்
கண்டீரோ  !!!
நக்கீரா வருந்தாதே!!! எல்லாம் சுபமே !   
 ;D ;D ;D

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சாபமாய் இருந்திடுமோ என அஞ்சி அணுகிட துஞ்சியவனுக்கு
சுபமே எனும் குறிப்பு லாபமே !!

Offline SweeTie

நான் பிறந்த இந்த  புனித நாளில்   உங்களை  சபமிடுவேனா???
உங்களுக்கு லாபம் கிடைத்ததில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
காலம் கடந்திடினும் ...இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !!

Offline SweeTie

காலம் கடக்கவில்லை உரிய
நேரத்தில் வாழ்த்தி  என்னை
உள்ளம் குளிர வைத்த  உங்கள்
அன்புக்கு நன்றி நன்றி நன்றி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அதுசரி ,

நன்றி நன்றி நன்றி 
என்றுரைப்பதை நோக்கிடின்
தந்தையோ, தமையனோ , தானே தானோ
நீதித்துறையில் நீதிபதியோ ??