Author Topic: ~ கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ~  (Read 429 times)

Offline MysteRy

கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி



தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 5 ரூ.
மிளகாய்வற்றல் – 6
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – சிறிதளவு
புளி – எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:

கறிவேப்பிலையை உருவி, சுத்தம் செய்து உலர்த்தவும்.
கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு இவற்றை வறுத்துப்பொடி செய்யவும்.
புளிக்கரைசலில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இவற்றுடன் வறுத்து அரைத்த பொடி, பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதித்ததும், குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
இந்தக் குழம்பு சிறிது சுண்டி கெட்டியானதும் இறக்கி விடவும்.
குறிப்பு: இது சாதத்திற்கு மட்டுமல்லாது, டிஃபன் வகையறாக்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.