வியத்தகும் லயிப்புடனான
நின் ரசிப்பது எழுப்பிய
உசுப்பலுக்கெனவே...
வெறித்தவாறே இரு கண்களையும்
விரித்தவாறே
பார்த்துக்கொண்டிருந்தேன்
கருத்த மேகத்திலிருந்து
பெருத்த வரமாய் இறங்கித்
தெறித்து விழும்
மழைத்துளிகளை .
அதுனால் வரை
அதுவாகவே மட்டுமிருந்துவந்த
அம்மழைத்துளிகள் ..
அது எப்படி அது
ருசிக்கும் உன்
ரசிப்பின் உசுப்பலோடு
பார்க்கையில் மட்டும்
அழகாய் அதிஅழகாய்
அடியே மழைக்காதலியே !!
இல்லையில்லை
திருத்தம்
எனைப்போல் அதிகமாய்
அதிஅழுத்தமாயன்றியும்
மழையையும் காதலிப்பவளே !!
இல்லா பெயருக்கும் புகழுக்குமே
புவியில் பேயாய் பறக்கும்
ஆட்சியாளர்கள் போலன்றி
எனக்கென தனித்திருக்கும்
ஒற்றை பெரும் புகழை
இழந்திட நான் இ.வாயன் அல்லவே ...