Author Topic: ~ உங்கள் பெயர் உங்களை பற்றி என்ன ரகசியம் சொல்கின்றது என தெரியுமா? ~  (Read 807 times)

Offline MysteRy

உங்கள் பெயர் உங்களை பற்றி என்ன ரகசியம் சொல்கின்றது என தெரியுமா?



எழுத்து A
உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள்.

எழுத்து B
நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

எழுத்து C
பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

எழுத்து D
அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள்..

எழுத்து E
மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

எழுத்து F
திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.

எழுத்து G
நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள்.

எழுத்து H
நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

எழுத்து I
நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

எழுத்து J
J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

எழுத்து K
ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள்

எழுத்து L
வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

எழுத்து M
M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

எழுத்து N
N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

எழுத்து O
அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள்.

எழுத்து P
நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

எழுத்து Q
நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

எழுத்து R
உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

எழுத்து S
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

எழுத்து T
எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும்.

எழுத்து U
அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள்.

எழுத்து V
நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள்.

எழுத்து W
ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

எழுத்து X
சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

எழுத்து Y
சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.

எழுத்து Z
இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

Offline Maran


Offline MysteRy

Hi Maran  :)

Nambikai than vazhkainu solvanga but ithei nambi mattum vazhkaiya ile  :P :P

Coz ithu just fun ku potathu  :)

Positive vishayathei oru encouragementaa irkathum  :) :)

And negative mattum thavirthu vidunga  :) :)