Author Topic: ~ சில்லி நண்டு – சைனீஸ் முறை ~  (Read 390 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில்லி நண்டு – சைனீஸ் முறை



தேவையான பொருட்கள்:

நண்டு – அரை கிலோ
மிளகாய் விழுது – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பூண்டு – ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை
சோளமாவு – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய தக்காளி – ஒரு கப்
வினிகர் – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்‌. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
(சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த‌ மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற‌ வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோலை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்தால் மிளகாய் விழுது கிடைக்கும். இது சைனீஸ் ஸ்பெஷல்).
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பூண்டினைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். தண்ணீரின் அளவு நண்டு துண்டுகள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
அத்துடன் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.
சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பு கெட்டியாவதற்காக அதில் சோள மாவினைச் சேர்க்கவும்.
சுவையான சில்லி நண்டு ரெடி.