Author Topic: ~ குழந்தைகளை பாதிக்கும் உப்பு நிறைந்த உணவுகள் ~  (Read 446 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளை பாதிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்



குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.

உடல் நலக் கேடுகள் குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று பெரிய வயது வரை உப்பிட்ட பண்டங்களை எடுத்துக் கொண்டால் வாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக்கோளாறுகள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவை நாள் பட அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவிலான சோடியத்தை (உப்பை) கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைகளை இதுபோன்ற உணவுகளிலிருந்து தள்ளியிருக்கச் செய்வது மிகவும் அவசியம். இளம் பருவத்தில் அவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு ஊட்டுவதன் மூலம் அவர்கள் உணவுகளுக்காக ஏங்குவதைத் தவிர்த்து ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்ய முடியும்.
எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமெனில், சிறுவயதில் இருந்தே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் வளர வளர அவர்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு உப்பினால் ஏற்படும் அபாயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தடுக்கலாம்.