வங்கியில் கடன் பட்டு 
பகட்டாய் காரிலே 
போகிறவன், கடன் இல்லாமல்
நடந்து போகிறவனை எகத்தாளமாய் 
பார்க்கும் உலகம் இது.
சரி எது  தவறு எது 
அறியாமல் பிதற்றுவார்
அதையே பின்பற்றுவார். 
அவர்களுக்கு சுகாதாரம், 
தரம்,ருசி மட்டுமே
மிகவும் முக்கியம் என்பார்கள் 
அது எது  என்று அறியாமலே !!
அதிக விலை அங்காடியில்
கலப்பின காய் கனிகளை  
பெயர் தெரியாமலே 
வாங்கி குவிப்பார்கள் பெருமைக்காக 
அங்கு விலை கேட்டால் இவர்கள் 
கௌவுரவம், மதிப்பு குறைந்து விடும். 
அதுவே தோற்றத்தில் முதிர்ச்சியையும் 
உழைப்பில் இளமையையும் 
உடையிலே வறுமையையும் 
உள்ளத்தில் நேர்மையுடன் 
வாழ நினைத்து,சிறு நிலத்தில் 
இயற்கையோடு ஒன்றி விவசாயம் 
செய்து ,சிறிது சிறிதாக கூறு வைத்து 
விற்று பிழைக்க நினைப்பவரிடம்
வந்து நின்று இவன் திறமை காண்பிக்கும்
இடமாக பேரம் பேசும் மூடர்களை 
என்னவென்று சொல்வது?
நல்ல பொருளை நியாயமான  விலையில் 
கொடுக்க முன் வந்தால் அவர்கள் 
தோற்றத்திற்கு விலை வைத்து
 வாங்க மறுக்காதீர்கள்.
பொருளின் மதிப்பு விற்கும் இடத்தில இல்லை 
பொருளின் தரத்தில் உள்ளது ...
இயற்கையோடு சேர்ந்து வாழ துடிக்கும் 
சிறு வியாபாரிகளுக்கு கை கொடுத்து 
சற்றே சிந்தித்து  சரியான வாழ்க்கையை 
ஆரோக்கியமாக வாழுங்கள் 
அவர்களையும் வாழ விடுங்கள்.
- கவிதை இணைப்பில்  சிநேகிதன்