Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள்! ~ (Read 363 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226796
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள்! ~
«
on:
December 24, 2015, 09:47:41 PM »
முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள்!
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், உங்கள் உடலில் வெப்பம் அதிகமாகும். இதனால் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக பருக்கள் தான் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் பருக்களை போக்க பலரும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் தான் அதிகமாகுமே தவிர, குறையாது.
ஆகவே கோடையில் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்களை சீக்கிரம் போக்கவும், கடைக்கு சென்று க்ரீம்களை வாங்காமல், சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்கள் முகப்பருக்களை எளிதில் விரட்டக்கூடியவை. இங்கு அப்படி முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா…
1. எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள்.
2. கற்றாழை ஜெல்
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த கற்றாழை ஜெல்லில் பருக்கள் போக்கும் தன்மையும் அதிகம் உள்ளது. அதற்கு தினமும் முகத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வாருங்கள்.
3. வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் பறந்து ஓடிவிடும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
4. தேன்
தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஈரப்பசையூட்டும் பொருள் உள்ளது. எனவே இதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த செயலால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி அடைக்கப்படும்.
5. ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதன் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் மறையும்.
6. திராட்சை
திராட்சையை எடுத்து இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10-15 நிமிடம் உற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள்! ~