Author Topic: ~ வரகரசி கூழ் தோசை ~  (Read 444 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வரகரசி கூழ் தோசை ~
« on: December 23, 2015, 06:56:34 PM »
வரகரசி கூழ் தோசை



தேவையானவை:

வரகரிசி மாவு (ஊறவைத்து, நீரை வடிகட்டி, மிக்ஸியில் பொடித்தது)
- ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். ஒரு கப் வரகரிசி மாவில் தண்ணீர் விட்டு கலந்து, கட்டி இல்லாமல் கரைத்து, பச்சை மிளகாய் கலவை சேர்த்துக் கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தவாவில் மாவை மெல்லியதாக தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.