Author Topic: ~ புற்றுநோயைத் தடுக்கும் ஜூஸ்! ~  (Read 318 times)

Offline MysteRy

புற்றுநோயைத் தடுக்கும் ஜூஸ்!



தேவையானவை:

கேரட் -1, செலரி - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி -3, எலுமிச்சை -1, தேன் - தேவையான அளவு, தண்ணீர் - 300 மி.லி.

செய்முறை:

நறுக்கிய கேரட், செலரி, கொத்தமல்லி, தக்காளியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு மிக்‌ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து, வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்

கேரட்டில் பீட்டாகரோட்டின் அதிக அளவு இருப்பதால், கண்களுக்கு நல்லது. பாலி அசிட்டிலீன், ஃபால்கார்சினால், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

வைட்டமின் ஏ, ஃபோலேட் சத்து உள்ளது. தயோசயனேட்ஸ், சல்பரோஃபேன் முதலான நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஃபிளேவனாய்டு சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் லைக்கோபீன் உள்ளது. எலுமிச்சைச் சாறு சிறிதளவு சேர்க்கப்படுவதால் வைட்டமின் சி அதிகம் கிடைக்கிறது.

செலரி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும்.

இந்த ஜூஸை அனைவரும் அருந்தலாம். வாரம் இருமுறை குடித்துவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதய நோயாளிகளுக்கு, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும், மறதி நோய் தடுக்கப்படும். உடலில் வளரும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.