Author Topic: காதலுக்கு ஒரு கைத்தொலைபேசி  (Read 577 times)

Offline SweeTie

You used to call me on my cellphone
என் இதயத் துடிப்போடு சேர்ந்து
ஒலிக்கும் கைத்தொலைபேசியின்
நாத இசை ,,,,,,
காதோடு செவ்விதழ்  சேர்த்து
கொஞ்சலும் குழையலுமாய்
நீண்ட இரவுகளைத் துயில் எழுப்பி
நினைவுகளைப்  பூமாலை தொடுத்து
நிழல்களை நிஜமாக்கத் துடிக்கும்
இதயங்கள் பரிமாறும் பாஷைக்கு
என்ன மொழி??????

கணங்கள் விரய மறுக்கலாம்
காற்று அசைவை நிறுத்தலாம்
கடல் அலைகள் ஓசை இழக்கலாம்
குயில்  கூவ மறக்கலாம்
அவன் தேன்மதுரக் குரலோசை என்
காதில் ஒலிப்பதை நிறுத்த முடியுமா??
கைத்தொலைபேசி  ஒலிக்கிறதே   இதோ.... 
You used to call me on my cellphone
 
« Last Edit: December 19, 2015, 05:55:23 PM by SweeTie »

Offline பொய்கை

தனியாகவோ ., அல்லது  கைபேசியிலோ வரும் ஒரு பெண்ணின் குரலை
மிகை படுத்தியோ , வர்ணித்தோ கவிதை கேட்டு இருக்கேன் .,,
நீயோ ,
ஒரு ஆணின் குரல் அழைப்பிற்கு உன் அழகு தமிழ் வரிகளால்
பாச்சூடி விட்டாய்.. நன்றி.! நன்றி !

அருமை., சுவீட்டி.,!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அழகிய வரிகள் !!

ஆங்காங்கே சிறு சிறு எழுத்துப்பிழைகள்
கூடுமானவரை அவற்றை தவிர்த்திட முயலுங்கள் !!

வாழ்த்துக்கள் இனியா !

Offline JoKe GuY

]தோழி ஒருவேளை கைதொலைபேசி உங்களின் காதலனாக இருக்குமோ ? அருமை வாழ்த்துக்கள் வளரட்டும் உங்களின் கவிதை படைப்புகள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline Maran



வாழ்த்துக்கள் கவிதாயினி இனியா...  :)  :)

முடிந்தவரை தமிழ் கவிதைகளில் ஆங்கிலத்தை தவிர்த்து விடுங்கள் தோழி.



காதலை ஏன் சங்கீதம் என்று கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சங்கீதத்தைப் போல காதலும் சுகமானது, மனசுக்கு இதமானது, தெம்பூட்டக்கூடியது, உற்சாகம் தரக் கூடியது, ஊக்கம் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு காதலும் ஆனந்த பைரவி போல, அமிர்தவர்ஷினி போல, மோகன ராகம் போல தென்றல் கலந்த தெய்வீக சுகானுபவம்தான்.



அதேபோல ..
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இப்படிப் பாடினால் சொக்காத உள்ளம் உண்டா..
திறக்காத மனக் கதவுதான் உண்டா.



நேரம்
சிலருக்கு நிழல்
சிலருக்கு கடிகாரம்
சிலருக்கு பேருந்து
சிலருக்கு கைத்தொலைபேசி 
சிலருக்கு சிலர்




Offline SweeTie

நன்றிகள்  பொய்கை ஆசை அஜித்   ஜோக்   மாறன்.   
இது நெஜமாகவே என்னுடைய  கைத்தொலைபேசியின்  நாத இசை.
என் சினேகிதி  இது வைச்சு ஒரு கவிதை செய்ய முடியுமா என்று
கேட்டாள்.  அந்த தருணத்தில்  நான்  எதுவும் நினைக்காமல் பண்ணிவிட்டேன்.
அதுக்காக எனது  பெயரையே   இனியா  என்று மாற்றிவிட்டீர்களா???
ஹா :D  ஹா  :D ஹா ;)
« Last Edit: December 23, 2015, 07:45:57 AM by SweeTie »