Author Topic: ~ பால்கோவா ~  (Read 316 times)

Offline MysteRy

~ பால்கோவா ~
« on: December 17, 2015, 05:26:58 PM »
பால்கோவா



தேவையான பொருட்கள்:

 பால் – 1 லிட்டர் சர்க்கரை – 1/4 கப் செய்முறை: முதலில் பாலை ஒரு கெட்டியான அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பால் பாதியாக குறைந்ததும், தீயை குறைத்து மீண்டும் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது பால் கெட்டியான நிலையில் இருக்கும். இந்நிலையில் கரண்டி கொண்டு தொடர்ந்து கிளறி விட வேண்டும். பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் மீண்டும் நன்கு கிளறி, தண்ணீர் முற்றிலும் வற்றி பால்கோவா பதத்திற்கு வரும் போது இறக்கினால், சுவையான பால்கோவா ரெடி!!! குறிப்பு: விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது ஏலக்காய் பொடி மற்றம் முந்திரி, பாதாம் போன்றவற்றை நறுக்கி தூவிக் கொள்ளலாம். இதனால் பால்கோவாவின் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
« Last Edit: December 17, 2015, 05:30:20 PM by MysteRy »