Author Topic: ~ டயட் தொக்கு -பாகற்காய் தொக்கு ~  (Read 335 times)

Offline MysteRy

டயட் தொக்கு -பாகற்காய் தொக்கு



தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 150 கிராம்
நெல்லிக்காய் பெரியது – 3 அ 4
கருவேப்பிலை – 1 கை
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 8
பொடிக்க – வெந்தயம்,கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – சிறிது
நல்லெண்ணை – 50 கிராம்

செய்முறை:


பாகற்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை எல்லாம் கழுவி துடைத்து,நறுக்கி துணியில் உலர்த்தவும்.ஈரம் போனதும் வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, காயவைத்து முதலில் புளியை வறுத்து எடுத்தபின் காய்கள்,பச்சை மிளகாய்,இஞ்சி வதக்கி புளியுடன் அரைக்கவும்..வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும் பெருங்காயம்,கடுகு,வெந்தயம் தூள்.
வாணலியில் எண்ணை ஊற்றி,கடுகு வெடிக்கவிட்டு, அரைத்த விழுதை போட்டு கிளறி,மஞ்சள் தூள்
சேர்த்து,வறுத்து அரைத்த பொடிகள் தூவி,உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.இந்த டயட் தொக்கு
மிகவும் நல்லது.