Author Topic: ~ பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன? அவசர சிகிச்சை என்ன? ~  (Read 386 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226794
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன? அவசர சிகிச்சை என்ன?



ஒரு பக்க கை, கால் செயலிழத்தல் பக்கவாதம் எனப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சிகரட், மது பழக்கம், உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. 70 சதவீதம் ரத்த ஓட்டம் தடைபடுவதாலும் 30 சதவீதம் ரத்த கசிவாலும் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டவர்களை நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஊசி மருந்தை போட்டால் பக்கவாதத்தை போக்க முடியும். காலதாமதமாக சிகிச்சைக்கு வந்தால் பக்கவாதம் சரியாக பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகும். அப்படியே ஆனாலும் முழுமையாக சரியாகாது. பக்கவாதம் வந்தவர்களை விரைந்து குறித்த காலத்திற்குள் சிகிச்சை எடுத்தால் 100 சதவீதம் சரியாகும்.