கண்ணனை காதலித்த மீரா பொய்யா????ஏஞ்சல் உங்களது இந்த வினாவின் பதில் மிக எளிது.சைவசமய குரவரான அப்பர் இறைவனுக்கு தான் அடிமை என்றும்,சுந்தரர் சிவனை தோழனாக நினைத்தும் இறைபக்தியை எப்படி வளர்த்தார்களோ ,அதே மாதிரிதான் மீராபாய்,ஆண்டாள் இருவரும் கிருஷ்ணபக்திக்காக காதலனாய் இறைவனை கற்பனை செய்து பக்திபாக்களை இயற்றினர்.இவர்கள் எல்லாம் சாதாரண  மனித உலக சிற்றின்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்கள்.ஆகவே இவர்களிக்கும் மானிடர்களின் காதலுக்கு பேரின்பத்தையே அனுபவித்ததாக கூறப்படும் இவர்களை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று நினைகிறன்.
 " காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேர்கின்றார்களா??   சேரவில்லை என்றால் அவர்கள் காதலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது ....."Posted by: Global Angel
 ஏஞ்சல் உங்களது இந்த கேள்விக்கான பதிலை ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன்.
      காதல் என்று சொல்லப்படும் இந்த ஆண்,பெண் பந்தத்தின்  முழுமையை,அடிவருடியை தெரிந்து,புரி்ந்து வாழ்க்கைமுழுவதும் அதை அனுபவிப்பவர்களே கா(காலமெல்லாம் காத்திருந்து)த(தவித்திருந்து)ல்(லயிக்கும் இன்பம்)/காதலர்கள் என்ற சொல்லை சொல்ல கூடிய தகுதியுடைவர்கள் என்பது எனது சொந்த எண்ணக்கரு.
     
        காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேராவிடினும் ஒருசிலர் சேருகின்றர்தானே! பிரிந்தவர்கள/மறந்தவர்கள்/ஏங்குபவர்கள்/காதலில் சேர்ந்தவர்கள் என்று எல்லோரையும் காதலித்தார்கள் என்றால்  அப்போ காதல் என்றால் தான் என்ன?காதலோட தனித்துவம் தான் என்ன?காதலின் முழுமை என்ன?