Author Topic: ~ முட்டை பரோட்டா ~  (Read 318 times)

Offline MysteRy

~ முட்டை பரோட்டா ~
« on: December 05, 2015, 05:34:50 PM »
முட்டை பரோட்டா



முட்டை பரோட்டா தேவையான பொருட்கள் : 

முட்டை - 4, மைதா மாவு - ½ கிலோ, டால்டா -100 கிராம், உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். டால்டாவை சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். மைதா மாவில் தேவையான உப்பு, கொஞ்சம் டால்டா கலந்து நீர் தெளித்து பிசையவும். இப்படி பிசையும்போதே அடித்து வைத்துள்ள முட்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பரோட்டா உருண்டைகளைப் போல மடித்து மடித்து, மீதமுள்ள டால்டாவைத் தடவி மடித்து மடித்து திரும்பவும் டால்டா தடவி கையால் அழுத்தி பரோட்டாவைப் போல எல்லா உருண்டைகளையும் செய்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, கொஞ்சம் டால்டா விட்டு பரோட்டாவை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்துக் கொள்ளவும். முட்டை பரோட்டா பிரிக்கப் பிரிக்க பஞ்சு போல மிகவும் சுவையாக இருக்கும். காய்கறி குருமாவும் இதற்கு நன்றாக இருக்கும். சிக்கன், மட்டன் குருமாவும் ருசியாக இருக்கும்.