Author Topic: சென்னை, கடலூர் மக்களுக்குகாக பிரார்த்திப்போம்  (Read 5897 times)

Offline vaseegaran

சென்னை, கடலூர் மழை வெள்ளம் பற்றி வரும் தகவல்கள் உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.பல மணி நேரமாக நீடித்துக் கொண்டேயிருக்கும் மழை அச்சத்தைக் கூடுதலாக்குகின்றன.  ஏரிக்குள் கட்டுமானம் என்பதையெல்லாம் பேசுவதை விடுத்து, நாட்டின் தலைநகரம் மிகப் பெரிய பேரிடரைச் சந்திக்கும் நிர்பந்தத்திற்குள் ஆட்பட்டிருக்கிறது என்பதை பொறுப்போடு ஏற்றுக்கொள்வோம்.
பாதாளச் சாக்கடையோ அல்லது வேறு திட்டங்களோ செயல்படுத்தப்பட்ட சாலைகளில் ஏற்பட்டிருக்கும், ஏற்படவுள்ள திடீர் பள்ளங்கள் மிக ஆபத்தானவை என்பதால் முடிந்தவரை பயணங்களைக் குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்.
பல இடங்களில் ஏற்பட்டிருக்கும் மின் தடை, மழை குறையும் வரை தொடர்வதைத் தவிர்க்க முடியாது, என்பதால் குறைந்த பட்சம் வெளி உலகத்துடன் தொடர்புகொள்ளும் சாதனங்களின் பேட்டரியை தக்கவைப்பது அவசியம்.
தலைநகரம்தான் ஆனால்...
தகுதியும், பாதுகாப்புமான நகரமா என்றெல்லாம் விவாதிக்கும் முன்...
ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இந்த இடரினைக் கடக்க வேண்டும் என்பதே!
மனித நேயத்தோடு.... மனமுருகி வேண்டுவது.... நம் அனைவரின் கடமை 

வயதானவர்களும்,பச்சிளம் குழந்தைகளும் வீட்டை ,உடைமைகளை முழுவதுமாக இழந்து வாடும் நிலை விரைவில் மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .


Offline Maran



"கல்லால் செய்யப்பட்ட அனைத்து கடவுள்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின"..


மதம் பிடித்த
மனிதனின்
திமிர் அடக்கி
பாடம் சொல்கிறது
இயற்கை......!



சென்னை மீண்டதற்கு முக்கிய ஒரு காரணம்.... இன்னும் களத்தில் இருக்கும் முகம் தெரியாத தன்னார்வளர்களும் நண்பர்குழுவும் உதவியே சென்னையை மீட்டது...


பேரிடர் பெருமழையே!
வீழ்ந்திடுவோமென்று
நினைத்தாயோ?
சாதி மத இன
விரிசல் களைந்து
ஒன்று கூடி மீட்டிடுவோம்
எம் மக்களை மீண்டிடுவோம்
இத்துயர்தனை வெல்வோம்...




« Last Edit: December 08, 2015, 03:47:32 PM by Maran »