Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 680 times)

Online MysteRy



துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

Online MysteRy



கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில்  இருக்கும்.

Online MysteRy



வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

Online MysteRy



பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

Online MysteRy



சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

Online MysteRy



குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

Online MysteRy



ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

Online MysteRy



வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

Online MysteRy



முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும்.  இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

Online MysteRy



மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

Online MysteRy



எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்...  சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

Online MysteRy



சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்;  மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.
« Last Edit: November 21, 2015, 05:47:17 PM by MysteRy »

Online MysteRy



இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.