மாறாத காதல் தந்தும்
சேராத காலம் தந்தாய்!!
என் உள்ளம் தாங்கும்வரையிலே
வலிகள் தா தாங்கிகொள்கிறேன்!
எதிர்காலம் ஏதோ சொல்ல
கடந்தவை நினைவில் செல்ல
நிகழ்காலம் மட்டும்
நெஞ்சில் வலியாய் நகர்கிறதே!!
கவிதையில் வரிகள் சேர்த்து
கண்தீன்ட தவமிருப்பேன்!
கண்ணீரே வற்றிப்போயினும்
காதலே காத்திருப்பேன்!!
-சக்தி
