Author Topic: நிலமீட்பு போராட்டம்!  (Read 424 times)

நிலமீட்பு போராட்டம்!
« on: November 20, 2015, 09:19:27 PM »
வடிந்த நீரெல்லாம்
வான் தந்தது!
வழி இல்லை என்றே
ஊர் வந்தது!
அழுத விவசாயிக்கு
எழுத தெறியாது!
எழுதுகிறேன் அவன்
ஏக்கத்தை!
ஏரிகள் இடமிழந்து
ஆறுகள் தடமிழந்து
முகவரி தேடுகின்ற
முதல் மழை கண்டு!
ஏங்குகிறான் என்
விவசாயி!
எங்கோ பெய்யுதேனு!
வந்த மழை தந்த பதில்
வருவேன் ஆறாக!
ஆக்கிரமித்தோர்
அழுதபின்பு!
இது நீர் செய்யும்
நிலமீட்பு போராட்டம்!
-சக்தி

Offline gab

Re: நிலமீட்பு போராட்டம்!
« Reply #1 on: November 20, 2015, 09:46:20 PM »
எதார்த்தத்தின் வரிகளை கவிதைகளாக வடித்துள்ள  உங்களுக்கு பாராட்டுக்கள்  . ஆம் மழை நீர் தன் இருப்பிடத்தை தேடி கண்டு பிடித்தது.எத்தனை ஏரிகள் ஆக்கிரமிக்கபட்டுள்ளன என்பதை இந்த மழை நமக்கு காட்டி விட்டது.

Offline SweeTie

Re: நிலமீட்பு போராட்டம்!
« Reply #2 on: November 21, 2015, 03:22:10 AM »
இயற்கையின் விழைவுகளை நாம் தாங்கித்தானே ஆகவேண்டி இருக்கிறது.
வாழ்த்துக்கள்

Re: நிலமீட்பு போராட்டம்!
« Reply #3 on: November 21, 2015, 11:14:17 PM »
நன்றி நட்புகளே