கண்டுகொண்டேன் அவன் உள்மனசை
தூத்தல் மழையிலே
அணைத்திடும் போதையில்
உராய்ந்திடும் வேட்கையில்
சிதறாமல் பரிசாக
சிந்திடும் முத்தங்களில்
காதலில் ஊடலும் ஊடலில் கூடலும்
கணத்தினில் நடக்கையில் இனிப்பதும்
பின்னர் தெளிவதும் உணர்வதும்
நாணத்தில் முகம் சிவப்பதும்
கால்கள் பின்னிப் பிணைவதும்
இயற்கையில் அமைவதே........