Author Topic: பாவக்காய் பாக்கறி  (Read 1166 times)

Offline Global Angel

பாவக்காய் பாக்கறி
« on: January 02, 2012, 04:13:01 AM »
பாவக்காய் பாக்கறி


தேவையான பொருட்கள்:
பாவக்காய் 1
வெங்காயம் 1/2 பெரியது
மிளகாய் 1
தக்காளி 1/2 பெரியது
கறிவேப்பிலை 10 இலைகள்
தேங்காய் பால் 3 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பெரும் சீரகம் 1 தே.க
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை:
1. பாவக்காயை சுத்தம் செய்து உங்களுக்கு வேண்டிய அளவில் & வடிவத்தில் வெட்டி எடுங்கள். கசப்பை சகிப்பது கடினம் எனில் சிறிய துண்டுகளாக இருப்பது நல்லது.
2. வெங்காயம், மிளகாய், தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
3. ஒரு சட்டியில் 1/2 கோப்பை நீரை ஊற்றி அடுப்பை பற்ற வையுங்கள். (அடுப்பை மட்டும் தான், தம்மை அல்ல)
4. வெட்டிய பாவக்காய், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை; மற்றும் பெரும் சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
5. பாவக்காய் பாதி வெந்ததும், தக்காளியை சேருங்கள்.
6. பாவக்காய் வெந்ததும், பாலை சேர்த்து கொதி நிலை வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
7. அம்புட்டு தான் மக்கா, கசப்பா இருந்தாலும் சகிச்சிட்டு சாப்பிட பாருங்க. உடல்நலத்திற்கு ரொம்பவே நல்லதுன்னு நல்லவங்க, பெரியவங்க சொல்றாங்க.

குறிப்புகள்:
* தேங்காய் உடைக்கும் போது அதில் வரும் நீரை எடுத்து பாவக்காயை வேக வைத்தால் கசப்பு குறையும்.
* வேக வைக்கும் போது சிறிதளவு சீனி(சக்கரை) சேர்த்தாலும் கசப்பு குறையும்.