Author Topic: சீனிச்சம்பல் பண்  (Read 1282 times)

Offline Global Angel

சீனிச்சம்பல் பண்
« on: January 02, 2012, 04:07:49 AM »
சீனிச்சம்பல் பண்
தேவையான பொருட்கள்:


கோதுமை மா

பால்

நீர்

ஈஸ்ட்

சீனி

உப்பு

முட்டை வெள்ளைக்கரு

சீனிச்சம்பல்



செய்முறை:

1. தேவையான பொருட்களை சரி அளவில் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி


3. பாலை லேசாக சூடாக்கி, முறையே சீனி, ஈஸ்ட் போட்டு நன்றாக கலக்கி ஒரு பக்கத்தில் வையுங்கள்.


4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள். குழைத்த மா இருமடங்காகி வரும் வரை வைத்திருங்கள். நீங்கள் இருக்கும் நாடு, காலநிலையை பொருத்து தான் எத்தனை மணி நேரம் என்று சொல்ல முடியும்.

உதாரணம்: அவுஸ்திரேலியாவில் குளிர்காலம் எனில் குறைந்தது 3 மணித்தியாலங்களாவது தேவைப்படுது.


5. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வையுங்கள். தட்டிலும் உருண்டைகள் மேலும் ஒலிவ் எண்ணெய் லேசாக தடவி விடுங்கள்.


6. ஒரு உருண்டையை எடுத்து லேசாக தட்டி, அதற்குள் சீனிச்சம்பலை வைத்து மூட வேண்டும். இது ஒன்றும் பெரிய மந்திரம் கிடையாது. நாங்கள் மோதகம் செய்யும் முறையே தான். இப்படியே அனைத்து உருண்டைகளுக்கும் செய்யுங்கள். ஒட்டும் பக்கத்தை தான் தட்டில் பார்க்க வைக்க வேண்டும்.


7. முட்டை வெள்ளைக்கருவை அடித்து லேசாக மேல் பக்கம் பூசுங்கள். அப்போ தான் பொன்னிறமாக வரும்.


8. ஒவனை முன்னரெ 190°C இல் வெப்பமாக்கி கொள்ளுங்கள். உருண்டைகள் தயார் ஆனதும், ஒரு பேக்கின் தட்டில் வைத்து உள்ளே வையுங்கள்.


9. 18 நிமிடத்தில் சரியாக வந்துவிடும். அதன் பின்னர் வெளியே எடுத்து ஆறிய பின்னர் உண்ணலாம். அல்லது என்னைப்போல் மற்றவர்களுக்கு குடுத்து மிரட்டலாம்.


10. நன்றி . வணக்கம். வந்திட்டோம்ல!! (பத்தாவது பொயின்ற் இல்லாமல் போட்டுது. எதையாவது எழுத வேண்டுமே.)




குறிப்பு:

1. மா குழைக்க அப்பா, அண்ணா போன்ற உதவிக்கரங்களை நாடுவது நமக்கு நல்லது.

2. சீனிச்சம்பலுக்கு பதில், உருளைக்கிழங்கு கறி, முட்டை கறி போன்றவற்றையும் வைக்கலாம்.



                    

Offline Safa

Re: சீனிச்சம்பல் பண்
« Reply #1 on: January 26, 2012, 12:33:37 PM »
hi Globel Angel,
 
            ungaloda intha recipe naan try pannalam nu eruken.. but  oru doubt seenisambal na enna angel.. athu puriyave ella.. 
safa

Offline Global Angel

Re: சீனிச்சம்பல் பண்
« Reply #2 on: February 23, 2012, 03:46:22 AM »
seeni sambal enrathu .... vengayathula panrathu .... nan athu seimurai kidaithaal post panren
                    

Offline Global Angel