Author Topic: ~ பட்டர் ஃப்ரூட் கேக் தீபாவளி ஸ்பெஷல் ~  (Read 317 times)

Offline MysteRy

பட்டர் ஃப்ரூட் கேக் தீபாவளி ஸ்பெஷல்



பட்டர் ஃப்ரூட் – 2,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 டின்,
மைதா மாவு – 1/4 கிலோ,
வெண்ணெய் – 150 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
ஃப்ரூட் எசென்ஸ் – சில துளிகள்,
பேகிங் சோடா – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் பேகிங் சோடா சேர்த்து சலிக்கவும். பட்டர் ஃப்ரூட்டை தோல், விதை நீக்கி மிக்ஸியில் அரைக்கவும். வெண்ணெய், சர்க்கரை பொடி சேர்த்து மிக்ஸியில் நன்கு நுரைக்க அடிக்கவும். கன்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்க்கவும். மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலக்கவும். எசென்ஸ் சேர்க்கவும். விரும்பினால் நட்ஸ் சேர்க்கலாம். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, 180 டிகிரி வெப்ப நிலையில் 1/2 மணி நேரம் அவனில் பேக் செய்யவும். அவரவர் வைத்திருக்கும் மைக்ரோவேவ் அவன் பொறுத்து நேரம், டிகிரி செட் செய்யவும். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இட்லி குக்கரில் பாதியளவு ஆற்று மணலை பரப்பி, சூடு செய்து அதில் ஒரு தட்டை வைத்து அதன் மேல் கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடி போட்டு பிறகு இட்லி குக்கரையும் மூடி 45 நிமிடம் மிதமான அளவில் வேக விடவும்.