Author Topic: ~ குக்கர் கேக் தீபாவளி ஸ்பெஷல் ~  (Read 346 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குக்கர் கேக் தீபாவளி ஸ்பெஷல்



இப்போ ஒரு 4 வருஷமா தான் ஓவன் ஒரு முக்கியமான தேவையா பார்க்க படுது. சும்மா சொல்ல கூடாதுங்க அரிய கண்டுபிடிப்பு தான்.அதற்காக எல்லார் வீட்டுலயும் ஓவன் இருக்கனும்னு அவசியம் இல்ல. விக்கியுற விலைவாசில அது எல்லோருக்கும் சாத்தியமும் இல்ல. ஓவன் இருக்குற வீட்டுலயும் கரண்ட் பில்லுக்கு பயந்துகிட்டு உபயோக படுத்துறது இல்ல அது வேற விஷயம். இப்போ நம்ப ஓவன் இல்லாமலேயே எப்படி கேக் செய்யுறதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா – 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் – 1/2 கப்
ஆப்ப சோடா – 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
பால் – 1 கப்
பொடித்த சக்கரை – 1 கப்
மஞ்சள் கலர் – 1 சிட்டிகை ( விருப்பபட்டால் )

செய்முறை :

ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சக்கரை அனைத்தையும் சேர்த்து சலித்து கொள்ளவும்.

பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்க்கவும்.

பின் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.

குக்கரில் ஆத்து மணலை பாதி அளவு கொட்டி அடுப்பில் வைக்கவும். (கண்டிப்பா மணல் தான் தேவைங்க.வீடு கட்டுவதற்கு உபயோக படுத்தும் மணல் )

கேக் செய்யும் பாத்திரத்தில் அதாவது கிணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சமா மைதா மாவை தூவவும், இதனால் கேக் ஒட்டாமல் வரும்.

கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.

இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தையும் வைத்து மூடவும்.
விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம் 30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும்.
10 நிமிடம் கழித்து எடுத்து,சூடாக பரிமாறவும்.
குறிப்பு
கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடும். ஆகையால் 25 நிமிடம் கழித்தவுடன், குக்கரை திறந்து இட்லி வெந்து இருக்க என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும்.
மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது அடுப்பை அனைத்து விடலாம் இல்லா விட்டால் இன்னும் சிறிது நேரம் வைக்கவும்.
குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்குமுன், மணலைச் சூடு செய்ய வேண்டாம். கலவை செய்யும் போதே மணலை அடுப்பில் வைத்தால் நேரம் குறையும் அதனால் கூறினேன்.
விசில், கேஸ்கட் இரண்டுமே போடததால் அதிகமான பிரஷர் உள்ளே இருக்காது அதனால் safety value ஒன்றும் ஆகாது.