Author Topic: ~ கடலை மாவு முறுக்கு ~  (Read 366 times)

Offline MysteRy

~ கடலை மாவு முறுக்கு ~
« on: November 05, 2015, 09:00:36 PM »
கடலை மாவு  முறுக்கு

தேவைப்படும் நேரம்: 35 நிமிடங்கள். 15 முறுக்குகள் கிடைக்கும்.



தேவையானவை:

அரிசி மாவு - 1 கப்
 கடலை மாவு - அரை கப்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 எள் - 2 சிட்டிகை
 எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். இதை 3 கண்கள் உள்ள தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி முறுக்காகப் பிழியவும்.  மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுத்துப் பரிமாறவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு:

மிளகாய்த்தூளுக்குப் பதிலாக மிளகுப் பொடி கூட சேர்க்கலாம். காரமே சேர்க்காமலும் செய்யலாம்