என்னில் பிறக்கும்
கவிதைகளில் வரிகளை விட
வலி அதிகம்!!
காரணம்
பேனாவால் பிறப்பதுதான் வரி!
பெண்ணால் பிறப்பதுவே வலி!
என் பேனாவை கை சுமந்ததை விட!
பெண்ணே உன்னை இதயம்
சுமந்தது அதிகம்!
அதனால் தானோ
மையும் மெய் மறந்து!
முதல்வரி ஆகுதுன் பெயர்!
காகித கவிதையில் கண்ணீர் பட்டு!
கரையுதே கவிதை கண்கள் விட்டு!
இறைவன் அழித்தது இதயத்தில் அல்ல!
இதை நீயும் அறிவாய்
மெல்ல மெல்ல!!!!!

---சக்தி ராகவா