Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு ! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு ! ~ (Read 480 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226796
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு ! ~
«
on:
October 29, 2015, 07:57:50 PM »
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு !
நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது. உடலிலுள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்துத் தளர்த்துவதால் நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளைக் காணலாம்.
தலைவலி: நமக்குப் பிடிக்காத ஒரு வேலையைப் பிறர் நம்மைச் செய்யச் சொல்லும்போது தலை வலிக்கிறது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தால் தலைவலி குறைவதுபோல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் உட்கொள்வதால் அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படிப் போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலைக் குறிக்கும். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டைக் குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இரண்டு புள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். தளர்த்தும் போது மூச்சை வெளியே விட வேண்டும். 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்து விட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால் மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு !
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்துத் தளர்த்தும் போது அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 விரல்களிலும் இவ்வாறு நாள்தோறும் இரண்டு முறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாகக் குறைகிறது.
மலச்சிக்கல், செரிமானமின்மை, அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் நெருக்கமாகச் சேர்க்கும் போது புறங்கையில் ஒரு கோடு தெரியும் அந்தக் கோடு முடியும் இடத்தில் ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் Fp.H.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்துத் தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும்.
தசையின் மேல் இல்லாமல் எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம். மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு ஆன்டாசிட் மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலைத் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. L14 என்ற புள்ளியை இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாகத் தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்திலுள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தைக் குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இரண்டு புள்ளிகளிலும்,
மற்றொரு கையின் இரண்டு விரல்களால், 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் கட்டை விரலைக் கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில் 14 முறையும் சுழற்ற வேண்டும் இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாகக் குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் நாள்தோறும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது சிறிதாக மாத்திரையின் அளவைக் குறைத்து கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்குக் கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது காற்று சக்தி அதிகரித்து இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறது. தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும்,
மூக்கிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுக்கும் போது படபடப்பு, மன அழுத்தம் இவை குறைவதால் இரத்த அழுத்தம் சீராகிறது. H9, GV20 இப்புள்ளிகளில், 14 முறை காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீரடைகிறது.
இதைத் தவிர காலில் பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறை அழுத்தம் கொடுக்கும் போது இரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறை மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால் இரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு ! ~