Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் ~ (Read 452 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226802
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் ~
«
on:
October 26, 2015, 08:25:34 PM »
ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம்
ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து வைத்தியம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில் ஐஸ் போட்ட ஜூஸ்களைக் குடிப்போம். சுத்தமில்லாத தண்ணீரில் தயாரிக்கும் ஐஸ், குல்பி போன்றவற்றால் கூட ஃபுட் பாய்சன் ஏற்படும். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், கெட்ட கழிவுகள் உள்ளேயே தங்கி, உடலுக்குப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்” என்ற சாந்தி விஜய்பால், சில மருத்துவ முறைகளைச் சொன்னார். அவை இங்கே உங்களுக்காக...
வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:
* சீரகத்தை வெறும் வாணலியில் கருப்பாக்கித் தீயும் அளவுக்கு வறுத்துப் பொடி செய்து... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கால் டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும்.
* சிலருக்கு வாந்தி வருவதுபோல தோன்றிக்கொண்டே இருக்கும். அதனால் எதுவும் சாப்பிட முடியாது. அப்படி இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் அதே அளவு எலுமிச்சைச்சாற்றைக் கலந்து அவ்வபோது நாக்கில் தடவினால் சரியாகும்.
* கோடையில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றை அளவுக்கு மீறி சாப்பிட்டாலோ, அல்லது சரியாகக் கழுவாமல் சாப்பிட்டாலோ அஜீரணம் ஏற்படும். இதனால் மலம் கழிக்கும்போது புளித்த வாடையுடன் நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். சீரகத்தையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பசுநெய்யில் பெருங்காயக்கட்டியைப் பொரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அரைத்த பொடியுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயக்கட்டியைக் கலந்து, பசுநெய்யில் கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும்.
* உடல் சூட்டினாலும் ஃபுட்பாய்சன் ஏற்படும். இதனால், அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும். வயிற்று வலியை உடனே குறைக்க நாமக்கட்டியை குழைத்து அடிவயிற்றில் தடவ வேண்டும். வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். ஒரு பிடி சீரகத்தை லேசாக வறுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.
மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து... ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.
மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.
*ஒரே நேரத்தில் பல விதமான மாமிசங்கள் சாப்பிட்டாலும் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கனில் ஒரு விதமான புரோட்டீன் இருக்கும். மீனில் வேறுவிதமான புரோட்டீன் இருக்கும். மட்டனில் உள்ள புரோட்டீன் இன்னொரு தன்மையில் இருக்கும். ஒரே நேரத்தில் சிக்கன், மட்டன், மீன் என்று சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். பாலுடன் முட்டையைக் கலந்து பிரெட் டோஸ்ட் சாப்பிடுவது; மாமிசம் சமைக்கும் போது அதில் தயிர், பால் சேர்ப்பது ஆகியவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம் ஏற்படும். சிறிது இஞ்சியை நசுக்கி, இதில் கல்உப்பைச் சேர்த்து மென்றால் உப்புசம் சரியாகி விடும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் ~