Author Topic: ~ இதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ் ~  (Read 364 times)

Offline MysteRy

இதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்



தேவையானவை:

பீட்ரூட் - 2, இஞ்சி சிறு துண்டு, தேன் - தேவையான அளவு, சுத்தமான தண்ணீர் 150 மி.லி.

செய்முறை:

 பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்:

ஹோமோசிஸ்டீன் (Homocysteine) எனும் அமினோஅமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள கிளைசின் பீட்டைன் (Glycine betaine) எனும் நுண்ணூட்டச்சத்து, இந்த ஹோமோசிஸ்டீன் அளவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. அதேபோல, பீட்ரூட்டில் ஃபோலேட், வைட்டமின் ஏ, பி6, சி, இ, கே சத்துக்களும் நிறைவாக உள்ளன.
இஞ்சி சிறிதளவு சேர்ப்பதால், உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அகற்றும். இஞ்சியில் இருக்கும் ‘ஜிஞ்சரால்’ சத்து, செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும். வயிற்றில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளையும் சரிசெய்யும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இஞ்சி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. பீட்ரூட், இஞ்சியுடன் தேன் சேர்த்துக் குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்குவதோடு, உடலும் புதுப்பொலிவு பெறும். வாரம் ஒரு முறை இந்த ஜூஸ் குடித்துவரலாம்.
இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமனானவர்களுக்கு மிகவும் ஏற்ற ஜூஸ் இது. குழந்தைகளுக்கு, இஞ்சி குறைவாகச் சேர்த்துக் கொடுக்கலாம்.