Author Topic: ~ இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்! ~  (Read 382 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226800
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்!

இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்!
குன்றிமணி என்னும் செடியின் வேரே அதிமதுரம். இனிப்புச் சுவையுள்ள இந்த அதிமதுரம்... ஏராளமான நோய், குறைபாடுகளை சரிசெய்யக்கூடியது. சூட்டினால் வரும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து இளம் வறுப்பாக வறுத்துப் பொடியாக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை சரியாகும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதேபோல் அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.



அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் இளநரை நீங்குவதோடு தலைமுடி மினுமினுப்பாக மாறும். மேலும், தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். அதிமதுரத்தை இடித்து, எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்துச் சலித்து இரவு படுக்கும்போது, டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் சரியாகும். போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஒரு கிராம் அளவு அதிமதுரச் சூரணத்தை பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.