Author Topic: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2015  (Read 1185 times)

Offline MysteRy

நண்பர்களுக்கு .... எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ... சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் வாழ்த்துகளை தாங்கிய கவிதைகளை ஏந்திவர நண்பர்கள் இணையதள வானொலி  காத்திருகிறது ...  உங்கள் வாழ்த்துகள் கவிதைவடிவில் நண்பர்களை சென்றடைய ஆசைப்படுகின்றீர்களா?... எதிர்வரும்அக்டோபர்  28 ஆம் தேதிக்கு  முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ...

கவிதைகள் அதிகமாக பதிவிடும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும் ... குறிப்பிட்ட  தேதிக்கு  முன்னர் பதிவு அனுமதி மூடப்படும் .. எனவே தங்கள் கவிதைகளை விரைவாக பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்


தீபாவளி திருநாளில் நண்பர்கள் வானலை வழியே உங்கள் கவிதைகள் ஒலிக்கட்டும் ... உள்ளம்  மகிழட்டும்.
« Last Edit: October 20, 2015, 01:17:13 PM by MysteRy »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அதிகாலை எழுந்ததும் ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டுஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று வண்ண வண்ண
வான வெடிகளை பார்த்தபடியே
கொஞ்சும் மழலைமுகத்துடன் முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்தலைமுதல் பாதம்வரை
தழுவிடும் மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன் அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும் கொள்ளை கொள்ளும்
இரவில் மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்

அசுரன் அழிந்து ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறிதுன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர


இந்த வருண்  யின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


   

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
தீபாவளி  ...
சற்றே திரும்பி பார்க்கிறேன்
என் பாலிய பருவத்தை.
பசுமையான மலை
செடி கொடிகளுக்கு நடுவே
பூத்து குலுங்கும்
நந்தவனமாக
என் பாட்டனின்
கிராமத்து வாசனையுடன்
நான் கொண்டாடிய
தீபாவளியை ....!

பட்டாசு சத்தம் காதை
கிழித்தாலும் அனைவருமே
எழுந்தாலும் எண்ணெய்
குளியலுக்கு பயந்து
உறங்குவதாய்
நடித்ததை நினைக்கையில்
சிரிப்பே  பரிசாக ...
நினைப்பே இனிப்பாக ...!

வகைவகையாய் பட்சணம்
 படைத்து வழிபாடு முடித்து
அனைவரும் ஒன்றாக
அமர்ந்து உண்ணும் போது
நான் மட்டும் அனைவரிடமும்
ஒரு வாய் வாங்கி
வயிறு  நிறைத்தது
நினைக்கையில்
இன்றும் பசி இல்லை ...!

எல்லாம் முடிந்து
பட்டாசு வெடிக்க
களம் இறங்கினால்
எனக்கு முன்  பயம்
 என்னை தொற்ற
பட்டாசையும் ஊதுபத்தியையும்
ஒன்றாக உடன் பிறப்பு
மேல் எறிய அவன் அலறிய அலறல்
இன்றும் நினைக்கையில்
பயமே மிரட்சியாக ...!

அறியாத வயதில் அனைத்தும்
ஆனந்தமே இன்று அறியும் போது
ஓசோனில் ஓட்டை
வறுமையில் மக்கள்
அன்று இருந்த மகிழ்ச்சி
இன்று இல்லை
இனியும் வராது?
ஏன் ?
முயற்சி இருந்தால்
 மகிழ்ச்சி நிச்சயம் ...!

இருப்பவர்களுக்கே
இது  தீபாவளி
இயலாதவர்களுக்கு இது
சரியான திருகுவலி .
விதியின் மேல்
 பழி போட்டு தப்பித்துகொள்ள
நாம் மூடர்கள் அல்ல
முன்பின் தெரியாதவனுக்கு
நீ அள்ளி கொடுக்க வேண்டாம்
கொஞ்சம் கிள்ளி கொடு போதும் ...!

எப்படியும் என் சொல்
 கேட்க போவதில்லை
எனக்காய் ஒரு வேண்டுகோள்
எப்படியும் பட்டாசை
 வாங்கி குவித்து ஓசோனில் ஓட்டையை
பெருசாக்க முடிவாயிற்று .
காசை கரியாக்குவதில்
கூட சிலரை வாழ வைக்கலாம்
சீனர்களின் பட்டாசை வாங்காமல்
சிவகாசி பட்டாசை வாங்கி
அவர்களை  வாழ வையுங்கள்
தித்திக்கும் தீபாவளி ...!  ਍਍
« Last Edit: October 22, 2015, 11:41:55 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline SweeTie

இதோ வந்துவிட்டாள் தீபக் கன்னி
ஆயிரம் தீபங்கள் சூழ்ந்து சுடர்விட
வேதியர் வேதம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் முழங்கிட
அழகு மங்கையர் ஆராத்தி எடுக்க
குழந்தைகள் குதூகலிக்க
வந்துவிட்டாள் ........

புது பட்டாடை  அணிந்த
பெண்களின் கூந்தலில் இணைந்த
மதுரை மல்லிகை கம  கமவென
வாசனையை அள்ளித் தெளிக்க
மாவிலைத் தோரணங்கள் மாக் கோலங்கள்
இல்லங்களை அலங்கரிக்க
சிவகாசிச் சரவெடிகள் தெருத் தெருவாய்  வெடிக்க
வந்துவிட்டாள் ...

புதியன கைகூடி
பழையவை கழியும் வேளை இது
புது உறவுகள் புது நட்புகள்
தேடிவரும் தோழமைக்கு முதல் வணக்கம்
நட்பைப் பேணிவரும் நம்  FTC  நண்பர்கட்கும் வணக்கம்
அன்பாலே கட்டிடுவோம் இங்கு ஓர் இல்லம்
அதில் அணைத்திடுவோம் நம் உறவுகளை
இனியன பேசுவோம் இனியன பகிர்வோம்
இனிதே கொண்டாடுவோம் இத் தீபாவளியை
இதோ அவள் வந்துவிட்டாள்.......... 
« Last Edit: October 24, 2015, 01:14:58 AM by SweeTie »

Offline thamilan

தீபத் திருநாளாம் தீபாவளி இன்று
வகை வகையாய் தீன்பண்டங்கள்ளும்
வான வேடிக்கயுமாய்
குதூகலிக்கும் குடும்பங்கள் பலப்பல

வானில் வெடிக்கும் பட்டாசுகளைப் பார்த்தபடி
பசியில்     வயிற்றை தடவும்
ஏழைகளும் பலப்பல

நாம் செய்த பண்டங்களை
இருக்கும் நம் அயலவருடன் பகிர்ந்துதுண்பதனை விட
இல்லாதவர்களுடன் பகிர்ந்துண்டால்
அவர்கள் வயிறும் நிரம்பும்
அவர்கள் வாழ்த்துக்களால்
நம் மனமும் நிறையும் அல்லவா

என்றோ ஒரு அரக்கனை அழித்ததை
பலநுறு வருடங்களாக கொண்டாடும் நாம்
இன்றும் அரசியல்வாதிகள் ரூபத்திலும்
மதவாதிகள் ரூபத்திலும்
மனித வளங்களையும் மனித மனங்களையும்
அழித்துக் கொண்டிருக்கும் அரக்கர்கள்
இன்னும் இருக்கின்றனரே
நாகசுரனை அழிக்க கிருஸ்ண பரமாத்மா
வந்தது போல
இன்னொரு பரமாத்மா வரவுக்காக
காத்திருக்கிறோமா நாம்

ஏன்
நமக்குள்ளும் பல அரக்கர்கள் இருக்கின்றனரே
ஆசை கோபம் குரோதம்
போட்டி பொறமை என
நமக்குள் இருக்கும் அரக்கர்களை
என்று அளிக்கிறோமோ
அன்றே உண்மையான தீபாவளி
ஈகை இரக்கம் மனிதநேயம் எனும்
அன்பு விளக்குகளை
என்று நம்  மனங்களில் ஏற்றுகின்றோமோ
என்றே நமக்கு உண்மையான
தீபத்திருநாள்
இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் நண்பர்களே
« Last Edit: October 26, 2015, 11:11:02 AM by thamilan »

Offline PaRushNi

நரகாசுரனின் வரலாறு தெரியாத பருவம்
பட்டாசும் புதுத்துணியுமே தீபாவளியின் காலம்
சரவெடியும்,வானவேடிக்கையும் பேரின்பம் கொடுக்கும்
முறுக்கு மற்றும் தின்பண்டங்கள் இனிமையை கூட்டும்
சொல்ல முடியாத இன்பம்
கண்களிலும் மனதிலும். 8)
மழையின் வரவு என்றும் மன மகிழ்ச்சியை தரும்
ஏனோ அன்று வந்தால் .. :o
சிறிது ஏக்கமும் வாட்டமும் எழும்.  :(
தூறல் நிற்கும் இடைவெளியில்
மீண்டும் தொடரும் வெடிச்சத்தம் அன்று.. :D

இன்று யார் வீட்டின் முன் அதிக பட்டாசுகளின் குப்பைகளோ
அவர்களே அதிக பணம் படைத்தவர்கள் :P
தீபாவளியின் சிறப்புத் திரைப்படங்கள்
தித்திக்கும் கடைத் தின்பண்டங்கள் என
எல்லாம் இருந்தும் ..
கையில்., மிளகாய் பட்டாசை
பிடித்து தூக்கி எறியும் அந்நாள்
கொசுவத்திச் சுருள்  நினைவலையாய்   
இன்னும் வரத்தானே செய்கிறது. ;) 

--கிறுக்கலுடன்
   பருஷ்ணி  :)

 
     

Offline MysteRy

Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2015
« Reply #6 on: November 03, 2015, 07:19:36 PM »
தீபாவளி இங்கே !!! தீபாவளி இங்கே !!!
இங்கே ஒளியின் திருவிழா...

நரகம் வென்ற சொர்க்க பெருவிழா ...
இருள் வென்ற ஒளியின் ஒருவிழா...


தீபாவளி இங்கே !!! தீபாவளி இங்கே !!!
இங்கே ஒலியின் திருவிழா..
.
பட்டாசு கலந்து சிரிப்பு ஒலிக்கும்...
மத்தாப்பு கலந்து வானம் ஜொலிக்கும்...
குழந்தை மனமோ குதூகலிக்கும்..


தீபாவளி இங்கே !!! தீபாவளி இங்கே !!!
இங்கே இனிப்பின் திருவிழா...

விருந்தின் சுவையை நா தேடும்...
இளைஞர் முதியவர்  மனம் நாடும்...
அன்பும் பண்பும் இதயம் பாடும்...


தீபாவளி இங்கே !!! தீபாவளி இங்கே !!!
இங்கே வெற்றியின் திருவிழா...

புதிரும் புதுமையும் கலந்த ஒருவிழா...
தோல்வி வீழ்த்திய வெற்றி பெருவிழா...



Offline Maran

Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2015
« Reply #7 on: November 04, 2015, 07:49:29 PM »



          தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


« Last Edit: November 04, 2015, 08:24:23 PM by Maran »

Offline CybeR

Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2015
« Reply #8 on: November 08, 2015, 02:50:52 PM »
தீபஒளி
பரபரப்பில்
பற்றிக்கொண்ட
விழாக்கால
கடைகளையெல்லாம்
வெள்ளக்காடாய்
மிதக்கவைத்துவிட்டு
வெளியேறி
சொந்த ஊரு
சென்றுவிட்ட
என் தமிழ்
இளைஞர்களைபற்றி
உருமாறிப்போன
வீதிகளும்
பெருமூச்சு விட்டுக்கொண்டே
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை
கொன்றுவிட்ட
இந்நாள்தான்
இவர்களுக்கு
இனியநாளாமென்று...!