Author Topic: ~ கணவரிடம் சண்டை போட்டால் அம்மா வீட்டிற்கு போகலாம் ~  (Read 731 times)

Online MysteRy

கணவரிடம் சண்டை போட்டால் அம்மா வீட்டிற்கு போகலாம்



கணவனும், மனைவியும் மோதிக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. ஆதிகாலத்தில் தொடங்கி, இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழும் காலம் வரை அது மறையாது. தம்பதிகளிடையே நடக்கும் மோதல் சகஜமானதுதான் என்றாலும், அவர்கள் மோதிக்கொள்ளும் முறைதான் அது சாதாரணமானதா? விவாகரத்து வரை செல்லக் கூடியதா? என்பதை தீர்மானிக்கிறது. அம்மா வீடு: கணவரோடு சண்டை ஏற்படும்போது பெண்கள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவதுண்டு.

பலரது பார்வைக்கு அது தவறானதாக இருந்தாலும், அது தான் சரியானது. இரண்டு பேரும் கோபமாக இருக்கும்போது அருகருகே நின்று கோபத்தை வளர்த்துக் கொள்ளாமல், அந்த நேரத்தில் சிறிது இடைவெளிவிட்டு பிரிவது கோபத்தை தணிக்கவே செய்யும். பிரிந்து இருவரும் தனிமைப்படும்போது ஓரளவு தெளிவாக சிந்திப்பார்கள். அப்போதுதான் நல்லது கெட்டது தெரிய வரும். மனைவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு வேறு எங்கேயாவது சென்றால் அது பாதுகாப்பில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

கூடுதலாக வேறு விளைவுகளையும் உருவாக்கிவிடும். அதனால் அம்மா வீட்டிற்கு செல்வது நல்லதே! அம்மா வீட்டில் ஆறுதலும், அன்பும் மட்டுமில்லை, சரியான வழிகாட்டுதலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்கு பயணமாவது நல்லதல்ல! பெற்றோரை மீறி காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு பொதுவாக அம்மா வீடு ஆறுதல் தருவதில்லை.

‘எங்கள் சொல் கேட்காமல் நீயாகத்தானே திருமணம் செய்துகொண்டாய். நீயே அனுபவி’ என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. மகளுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதில் இருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. குறிப்பாக அம்மாக்கள் திருமணமான மகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.