Author Topic: கேரட் அல்வா!  (Read 1472 times)

Offline Yousuf

கேரட் அல்வா!
« on: December 31, 2011, 05:31:21 PM »
தேவையான பொருட்கள்

கேரட் - 4
பால் - 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
சர்க்கரை - 2 கோப்பை
வறுத்த முந்திரி - 10

செய்முறை

1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

2. துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.

4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும்.