Author Topic: ~ ஒரு நாளைக்கு எத்தனை தடவை காபி குடிக்கலாம்? ~  (Read 502 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226799
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஒரு நாளைக்கு எத்தனை தடவை காபி குடிக்கலாம்?



காலை எழுந்தவுடன் குளித்து தயாராகி கூழ் குடித்து வேலையை ஆரம்பித்தனர் நம் தாத்தா பாட்டி தலை முறையினர். இன்றைய நாகரீகம் படுக்கையில் இருந்த படியே காபி குடிப்பது என்றாகி விட்டது. ஒரு கப் காபி காலையில் இல்லாவிடில் சுறுசுறுப்பு இருப்பதில்லை. தலை வலி வந்து விடுகிறது.

இது போல் பல காரணங்கள் சொல்வார்கள். வெறும் காபி மட்டும் குடித்து விட்டு மறுபடி 11 மணிக்கு ஒரு காபி என குடித்து மதியம் வரை உடலை எந்த அளவு தானாகவே கெடுத்துக் கொள்ள முடியும் என்று நினைப்பவர்கள் அதிகம். வீட்டிற்கு வருவோரையும் ‘காபி’ குடிக்கின்றீர்களா? என்ற உபசரிப்பில் தான் ஆரம்பிக்கின்றோம். உலக அளவில் அதிகம் அருந்தப்படும் பானத்தில் காபி மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. காபி அருந்துபவர்களில் பலர் நம் நாட்டில் வேலை அழுத்தம், உணவு சாப்பிட நேரமின்மை போன்ற காரணங்களாலும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.

பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இது ஒரு சக்தி தரும் கறுப்பு பானமாக கருதப்பட்டது. மருத்துவத்தில் முதலில் இதில் உள்ள குறைபாடுகளை கண்டு தவிர்க்க வேண்டும். என்றாலும் தொடர் ஆய்வுகள் இதனின் நல்ல பயன்களையும் கண்டறிந்து அளவான காபி அருந்துவதை தவறாகக் கூறுவதில்லை. உலக அளவில் காபி பயிரிடுவதில் பல நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. கேஃபின் நீக்கிய காபியும் இன்று பரவலாக உபயோகத்தில் உள்ளது. 1976-களில் காபி கொட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு காபி பயன்பாட்டில் இருந்தது.

காபியில் சிக்கரி கலப்பது நம் நாட்டில் பழக்கத்தில் உள்ளது. சிக்கரி என்ற தாவரத்தின் வேரே இது. பொதுவாக காபியுடன் 30 சதவீத சிக்கரி கலந்தே கடைகளில் கிடைக்கின்றன. சிக்கரி சேர்ப்பதன் மூலம் காபியின் அளவு குறைகின்றது. சிக்கரிக்கு ரத்தத்தினை சுத்தம் செய்யும் குணமும், கல்லீரல் ஆரோக்கியத்தினை காக்கும் குணமும் உண்டு. சிக்கரி அதிக இன்சுலின் சத்து நிறைந்தது. நம் மக்களின் பிரச்சினையே அளவுக்கு அதிகமாக எதையும் பயன்படுத்துவதுதான். அவ்வாறே காபியினையும் நாள் ஒன்றுக்கு 3-4 கப் குடிக்கும் பொழுது அது தீங்கு விளைவிக்கின்றது.

முறையாக பயன்படுத்தினால் காபியும் உடலுக்கு நன்மையே செய்யும். காபிக்கு பல காலமாக பல குற்றச்சாட்டுகள் உண்டு. வளர்ச்சி பாதிக்கும், புற்றுநோய் வரும் என்றெல்லாம் சொல்லப்பட்டதால் காபி பிரியர்கள் பயந்தனர். ஆனாலும் சுத்தமாக காபியினை நிறுத்த முடியாமல் குடித்தே வந்தனர். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் நீங்கள் இவ்வளவு பயப்பட வேண்டாம். காபியிலும் பல நன்மைகள் உள்ளன என்று கூறுகின்றன. குறிப்பாக புற்றுநோய், இருதய நோய்க்கு காபி குற்றவாளி அல்ல என்று குறிப்பிடுகின்றன.

ஆயினும் காபியில் சேர்க்கப்படும் பாலும், சர்க்கரையும் ஒரு கப் காபியினை சுமார் 500 கலோரி சத்து அளவிற்கு கொண்டு செல்வதும் சரியல்ல என்று குறிப்பிடுகின்றன. சிலர் ஓயாமல் காபி குடிப்பர். இப்படி இருப்பவர்களுக்கு உடலில் நடுக்கம், படபடப்பு, டென்ஷன் போன்றவை இருக்கும். கண்டிப்பாய் தூக்கம் பாதிக்கப்படும். ரத்த கொதிப்பு கூடும். மது போல் காபி அடிமைகளும் உண்டு. ஆக இந்த பாதிப்பு உடையவர்கள் கண்டிப்பாக காபியினை தவிர்த்து விடுவது நல்லது. காபி ஸ்டிரெஸ் ஹார்மோன் அதிகரிக்க செய்கின்றது.

இதனால் அதிக காபியால் உடல் தளர்வடைகின்றது. காபி தொடர் பழக்கம் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகரிக்க செய்யும். இதனால் இது இருதய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. நெஞ்நெரிச்சல், ஆசிட் தொல்லை ஏற்படுகின்றது. அதிக சிறுநீர் வெளியேற்றம் ஏற்படும். இதனால் தாது உப்புகள் குறைபாடு ஏற்படுகின்றது. சில குறிப்பிட்ட மருந்துகளின் செயல் திறனை குறைக்கின்றது. காபி குடிப்பதற்கு அடிமையாகி அதாவது 3 கப் காபிக்கு மேல் குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதே நல்லது. அந்நேரத்தில்

* நிறைய நீர் குடியுங்கள். காலையில் காபி குடிக்கும் நேரத்தில் வெது வெதுப்பான நீர் குடியுங்கள்.

* தலைவலி ஏற்படாது இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அதிக சோர்வு இருந்தால் நிறைய நேரம் தூங்குங்கள்

* வைட்டமின் ‘சி’ மாத்திரையினை மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

* சோர்வினை நீக்க நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

* குறைந்தது 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* 1-3 கப் க்ரீன் டீ பருகுங்கள்.

* உங்கள் உடல் நலனைப்பற்றி அன்றாடம் குறிப்பு எடுத்து மருத்துவரிடம் பேசுங்கள்.