« on: October 08, 2015, 01:59:09 PM »
சிறுதானிய சமையல்... சுவை ப்ளஸ் ஆரோக்கியம்!
``முன்பெல்லாம் வயதானவர்களின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட சுகர், பிளட் பிரஷர் போன்றவற்றை இப்போது இளைஞர்கள்கூட சுமந்துகொண்டிருக்கும் நிலை பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் தவறான உணவுப்பழக்கத்தை முக்கிய காரணமாக உணவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நாம் பாரம்பர்யமாக உபயோகித்துவரும் சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். சிறுதானியங்களில் சுவையான, விதம்விதமான உணவு வகைகளை செய்து பரிமாறினால், குடும்பத்தினர் உற்சாகமாக சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்... ஸ்வீட் பால்ஸ், இடியாப்பம், லஸ்ஸி, டோக்ளா என்று சூப்பர் சுவை கொண்ட உணவுகளை இங்கே சிறுதானியங்களில் தயாரித்து வழங்குகிறார்.
« Last Edit: October 08, 2015, 02:21:28 PM by MysteRy »

Logged