Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ~ (Read 685 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223631
Total likes: 28029
Total likes: 28029
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ~
«
on:
October 03, 2015, 10:46:17 PM »
ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்!
அ ன்று விடுமுறை தினம் என்பதால், கோமதியும் வித்யாவும் மாலை நான்கு மணிக்கே உஷா மேம் வீட்டில் ஆஜராகியிருந்தார்கள்.
‘‘Let’s talk over a cup of coffee...” என்றபடி அவர்களுக்கு காபி தந்து உபசரித்தார் மேம்.
‘‘Thanks for your nice coffee, ma’m!’’ என்று, நன்றி சொன்னபடியே வித்யா காபியை பருகிக் கொண்டிருக்க, கோமதியின் முகத்தில் ஏதோ ஒரு தவிப்பு. அதை கண்டுகொண்ட உஷா மேம், ‘‘என்னாச்சு கோமு, காபியில சர்க்கரை போதலையா?’’ என்று கேட்டார்.
‘‘ஐய்யய்யோ... அதெல்லாம் சரியாதான் இருக்கு, ஆன்ட்டி. ஹோம் வொர்க் பண்றப்ப நெறைய சந்தேகம் வந்தது. அதையே நினைச்சுட்டிருந்தேன். இருந்தாலும் I can be able to do my homework’’ என்ற கோமதி, தான் எழுதி வந்திருந்த ஹோம்வொர்க்கை பெருமையாக காட்டினாள்.
‘‘மேம், கோமதி அக்கா can be able னு சேர்த்து சொன்னாங்க. அது சரியா?’’ என்று இடைச்செருகலாக வித்யா ஒரு கேள்வியை விட,
‘‘தப்புதான் வித்யா. ரெண்டையும் சேர்க்கக் கூடாது. I can do it -னு சொல்லலாம். இல்லேன்னா, I was able to do it அல்லது I have been able to do it -னு சொல்லலாம். can -ம் be able -ம் ஒண்ணா வராது. ஏன்னா, அது ரெண்டும் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள்!’’ என்று சொன்ன மேம், கோமதியின் ஹோம்வொர்க் நோட்டைப் பார்த்தார்.
‘I ate two mangoes yesterday’ மற்றும் ‘Mala writes a letter today’ என்ற வாக்கியங்களை did, does என்று பிரித்து, இப்படி கேள்வி வாக்கியங்களாக மாற்றி எழுதியிருந்தாள் கோமதி...
1. What did you eat yesterday?
2. When did you eat two mangoes?
3. What does Mala write today?
4. When does Mala write a letter?
வித்யாவும் தன் நோட்டைக் காண்பித்தாள். அதில் கோமதி எழுதாமல் விட்ட ஒரு கேள்வி இருந்தது.
How many mangoes did you eat today?
‘‘கோமு! ஸ்டெப்ஸ் போட்டு What, When னு கேள்வி போட்டு நல்லா எழுதியிருக்கே. வெரிகுட். ஆனா, ‘ How many’- ங்கிற கேள்வியை ஏன் ஸ்கிப் பண்ணிட்டே?’’
‘‘ ‘வெர்ப்’பைக் கவனிக்கறதுலியே என் டைம் போயிடுச்சி ஆன்ட்டி.’’
‘‘வாக்கியங்களைக் கேள்வியா மாத்தற பயிற்சி குடுக்கிறது எதுக்கு தெரியுமா? எப்படிக் கேள்வி கேக்கணும், எப்படி பதில் சொல்லணும்னு தெரிஞ்சிக்கத்தான். நாளடைவுல மனசுக்கு உள்ளேயே பண்ற ஸ்பீட் கிடைக்கும். இப்ப இந்த வாக்கியத்தைப் பாருங்க. வார்த்தைகளுக்கு அன்டர்லைன் பண்ணி Wh போட்டிருக்கேன்.
இங்கே two ங்கிறது எண்ணிக்கை. அதுக்கு how many; காலத்தைக் குறிக்க when வரும். இடத்தை கேட்க where ...’’ என்று உஷா மேம் சொல்லிக் கொண்டே போக, ‘‘மத்ததை நான் சொல்றேன் மேம்...’’ என்று ஆரம்பித்தாள் வித்யா.
“ why & க £ரணம், which -செலக்ஷன், how -பண்பு, how much -அளவு விலை, how long- கால அளவு. ‘யாரை’னு கேட்க whom வரும், இல்லையா, மேம்?’’ ‘‘ரைட். யாரைனு கேட்க who கூட வரலாம். இந்த who ரெண்டு விதமான கேள்விகள்ல வரும். ‘யார்’னு கேக்கறப்ப பொதுவா do வரிசை வெர்ப் வராது. ‘who ate two mangoes yesterday?’ னு நேரடியா கேட்டுடலாம். சில சமயம் ‘who did it’ னு வரும். ஆனா ‘யாரை’னு கேக்கறப்ப do வரிசை வெர்ப் வேணும். உதா ரணத்துக்கு, இந்தக் கேள்வி பதிலைப் பாருங்க...
A. Who did you meet?
B. I met Kala
புரிஞ்சுதா கோமு? எனி அதர் ப்ராப்ளம்?’’
‘‘காபி சூப்பரா இருக்கு, ஆன்ட்டி!’’ என்றாள் கோமதி.
‘‘அட, காபி சூப்பரா இல்லேன்னாதாம்மா ப்ராப்ளம்’’ என்று உஷா மேம் கமெண்ட் அடிக்க, கலகலவென சிரித்த கோமதி, வித்யா பக்கம் திரும்பி, ‘‘என் பேனாவுல இங்க் தீர்ந்து போச்சு. Could you give me your pen please?’’ என்று கிசுகிசுத்தாள்.
இதைக் கவனித்த மேம், ‘‘கோமு! ரிக்வஸ்ட் பண்றப்ப could -ங்கிற வார்த்தைதான் யூஸ் பண்ணனும்னு இல்லை. would கூட யூஸ் பண்ணலாம். ‘நீங்க மனசு வெப்பீங்களா’னு கேக்கற மாதிரி இருக்கும். அதை would you mind னு ஆரம்பிக்கணும். ஆனா அதுல வர்ற verb க்கு கட்டாயம் ing சேர்த்து சொல்லணும்’’ என்று கூறிவிட்டு, ‘‘Would you mind giving me the duster, please?’’ என்று கேட்க, கோமதியும், ‘‘Here you are!” என்று தன் அருகில் இருந்த டஸ்டரை நீட்டினாள்.
‘‘அடடே! முந்தின க்ளாஸ்ல நான் சொல்லித் தந்த ஸ்டைலை பக்கவா புடிச்சிக்கிட்டியே’’ என்று சிரித்த உஷா மேம், ‘‘ஷாப்பிங் போறப்ப சேல்ஸ்மேன்கிட்ட Could யூஸ் பண்ணனும்னு தேவையில்ல. ‘Can you show me another saree, please’ னு கேக்கலாம். ஃப்ரெண்ட்ஸ் நடுவுல ‘Can you... please’ இயல்பா இருக்கும்!’’ என்றபடி, ‘‘Shall we go back to our lesson?’’ என்று கேட்டுக்கொண்டே போர்டில் எழுத ஆரம்பித்தார்.
கோமதியிடம், ‘‘டி.வி. மேல ஒரு பேனா வச்சிருக்கேன். ஹால்ல அங்கிள் சினிமா பார்த்திட்டிருக்கார். அதை எடுத்து வா. சினிமாவுல மூழ்கிடாம சீக்கிரம் வா!’’ என்றார் மேம். போன வேகத்திலேயே வந்தாள் கோமதி.
‘‘பரவாயில்லியே... உடனே வந்துட்டியே.’’
‘‘இன்னக்கி டி.வி. சினிமாவை sacrifice பண்ணிட்டுத்தான் இந்த க்ளாஸுக்கே வந்தேனாக்கும்!’’ இது கோமதி.
‘‘அதுல ஒரு ரகசியம் இருக்கு மேம். அந்த சினிமாவை மூணாவது தடவையா டி.வி.ல போடறான். கோமு அக்கா fed up ஆய்ட்டாங்க!’’ இது வித்யா.
‘‘அதுதான் என்னோட ரகசியமும் கூட!’’ என்று உஷா மேம் சிரித்துக் கொண்டே சொல்ல, மற்றவர்கள் முகத்தில் ஆச்சர்யப் புன்னகை.
பேசிக்கொண்டே போர்டில் மேம் எழுதியிருந்தது...
‘‘இது Present tense, Past tense அட்டவணைதானே மேம்?’’
‘‘ஆமா, Present tense னு நாம வழக்கமா சொல்றதை இப்பல்லாம் வினைப் பொது நிலை, அதாவது infinitive னு சொல்றாங்க. Simple past இறந்த காலம். Past participle இறந்தகால எச்சவினை. Infinitive உடன் -d, -ed சேர்த்தால் கிடைப்பது regular verb. Infinitive ல எழுத்து மாற்றம் செய்தோ, செய்யாமலோ கிடைப்பது irregular verb . இங்கிலீஷ்லயே 150க்கு கொஞ்சம் கூடுதலாதான் irregular verbs இருக்கு. அந்த லிஸ்ட்டை அர்த்தத்தோட மனப் பாடமா வச்சுகிட்டா இங்கிலீஷ் ஈஸிதான்!’’
கோமதி கேட்டாள்... ‘‘எனக்கு ஒரு சந்தேகம் ஆன்ட்டி. Liked, killed னு simple past‚ கும் , past participle க்கும் ஒரே மாதிரி எழுதியிருக்கீங்க.வாக்கியத்துல வர்றப்ப எது எந்த வகைனு எப்படி கண்டுபிடிக்கிறது?’’
‘‘ There you are ! நிறையப் பேரோட சந்தேகத்தை நீ கேட்டுட்டே...’’ என்றபடி போர்டில் உஷா மேம் எழுத ஆரம்பித்தார்...
1. I liked her
2. She has liked me
3. She is liked by me
‘‘இந்த வாக்கியங்கள்ல மூணு தடவை liked -னு எழுதியிருக்கேன். எது simple past, எது past participle னு நீங்க சொல்லணும். கூடவே ஏன்னு காரணத்தையும் சொல்லணும்... ஓகே. கோமதி... நீ சொல்லு.’’
‘‘முதல் வாக்கியத்துல வர்ற liked வந்து simple past . பார்த்தாலே தெரியுது ஆன்ட்டி.’’
‘‘ஓகே. வித்யா... நீ சொல்லு.’’
‘‘ரெண்டாவது வெர்ப் past participle , மேம். ஏன்னா have வரிசையோடு வந்திருக்கு.’’
‘‘குட்! கோமதி, நீ மூணாவது வாக்கியத்துக்கு சொல்லு...’’
‘‘........’’
‘‘என்ன தெரியலயா? ஒரு க்ளூ குடுக்கறேன். - ed னு முடியுற வெர்ப்-கள் be வரிசை அல்லது have வரிசையோடு வந்தா, அது Past participle . இது put மாதிரி வெர்ப்புக்கும் பொருந்தும்.’’
‘‘மூணாவது, past participle ஆன்ட்டி’’ என்றாள், கோமதி குதூகலமாக.
‘‘ரைட். Let’s call it a day . அதாவது இன்னைக்கு இதோட முடிச்சுப்போம். அடுத்த க்ளாஸ்ல, அதாவது வென்ஸ்டே அன்னிக்கு மறுபடியும் மீட் பண்ணலாம்.’’
விடை கொடுக்க எழுந்த உஷா மேமை, கோமதியின் கேள்வி உட்கார வைத்தது... ‘‘ஆன்ட்டி... அது ‘வெட்னஸ்டே’ தானே. ஏன் வென்ஸ்டேனு சொல்றீங்க?’’
‘‘ஏன்னா wed -ல இருக்கற d -க்கு சவுண்ட் இல்ல. ஸைலண்ட்!’’ என்று கூறியவர், ‘‘கோமு! ஷிவானி குட்டியோட ‘ப்ராக்ரஸ்’ பத்தி அவளோட மிஸ்கிட்டே நீ விசாரிக்கிற மாதிரி 5 கேள்வி எழுதிட்டு வா. வித்யா! நீ ஃப்ரெண்ட்ஸ் கிட்டே அவங்க சமீபத்துல படிச்ச புக் பத்தி விசாரிக்கற மாதிரி எழுதிட்டு வா...’’ ஹோம் வொர்க் கொடுத்துவிட்டு வகுப்பை முடித்தார் மேம்.
கத்துக்கலாம்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! ~