Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள் ~ (Read 334 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226800
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள் ~
«
on:
October 02, 2015, 07:39:25 PM »
குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்
உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே
உடல் எடையை அதிகரிக்கவும் சிலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள்.
இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க சிலவகை பழங்கள் உங்களுக்காக,
வாழைப்பழம்
வாழைப்பழ உடல் அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல பழமாகும்.
வாழைப்பழத்தில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இவற்றை உடல் எடையை குறைக்க நினைப்போர் சாப்பிடக்கூடாது.
உலர் பழங்கள்
உலர் பழங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது.
எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள்.
மாம்பழம்
உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு கோடைக்காலம் தான் சிறந்தது. ஏனெனில் பழங்களின் அரசனான மாம்பழமானது கோடையில் விலை மலிவில் அதிகம் கிடைக்கும்.
இந்த மாம்பழத்திலும் கலோரிகள் எண்ணற்ற அளவில் உள்ளது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சப்போட்டா
சப்போட்டாவிலும் கலோரிகள் வளமாக உள்ளது. இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம்.
ஆனால் இதனை அவ்வப்போது சாப்பிட்டால், எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5 பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது.
அவகேடோ
எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது.
மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள் ~