Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்துக் கடை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நாட்டு மருந்துக் கடை ~ (Read 429 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226806
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நாட்டு மருந்துக் கடை ~
«
on:
October 01, 2015, 02:27:12 PM »
நாட்டு மருந்துக் கடை
‘‘அவன் சரியான விளக்கெண்ணெய்...” என இனி யாராவது திட்டினால், கைகுலுக்கி, பூச்செண்டு கொடுங்கள். விளக்கெண்ணெய் அவ்வளவு விசேஷமானது. விளக்கெண்ணெய், ஆமணக்கின் குருதி. ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண்மருந்துகள்தாம் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இதழ் ‘நாட்டு மருந்துக்கடை’யின் நலப்பொக்கிஷம் ஆமணக்கு விதையும் விளக்கெண்ணெயும்தான்.
ஆமணக்கின் இலை, விதை, எண்ணெய் என அனைத்தும் மருத்துவக் குணம் நிரம்பியவை. இதன் இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பு மருந்து. ஆமணக்கு இலையை ஆமணக்கு எண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும்.
பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரிவர பால் சுரக்கவில்லை என்றாலோ, இதன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம். சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும்.
கீழாநெல்லி இலையுடன் ஆமணக்கு, கொளுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலையை சேர்த்து, உலர்த்திப் பொடி செய்து, காலை மாலை அரை டீஸ்பூன் அளவு கொடுக்க, காமாலை குணமாகும் என, சித்த மருத்துவ அனுபவங்கள் கூறுகின்றன.
ஆமணக்கு எண்ணெயில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், வைரஸ்க்கு எதிராக அது செயல்படுவதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஹெச்.ஐ.வி வைரஸைக்கூட சோதனைக் குழாயில் ஆமணக்கு கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.
ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரை விட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல் பிழிந்துதான் விளக்கெண்ணெயும் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள ‘ரெய்சின்’ எனும் சத்து பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது.
நோய் குணமாக்கலில் ‘நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது.
மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அங்கீகாரம் பெறுவது என்பது குதிரைக் கொம்பு. அந்த பெரும் அமைப்பே விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது (GRAS-Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது.
தென் தமிழகத்தில் பருப்பு குழைவாக வர அதனுடன், இரு துளி விளக்கெண்ணெயை விட்டு வேகவிடுவது மரபு. ஆரோக்கியம் தரக்கூடிய உணவு எனப்படும் ஒரு ஃபங்ஷனல் ஃபுட் (Functional food). ஆகவே, விளக்கெண்ணெய் நம் மரபில் இருந்து வந்திருக்கின்றது என்பதை இதன் மூலம் உணர முடியும். ‘விரேசனத்தால் வாதம் தாழும்’ என்கிறது சித்த மருத்துவம். நன்கு மலம் கழிந்தால், வாத நோய்களாகிய மூட்டு வலி முதல் ஆஸ்துமா வரை பயன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.
பிரசவித்த பெண்களுக்கும் மலம் எளிதில் கழிய, ஆமணக்கு எண்ணெயை 10 - 20 மி.லி வரை உடல் எடை, ஆரோக்கியநிலையைப் பொறுத்து அளவாகக் கொடுக்கலாம். சளி, இருமல், கோழைக்கட்டு உடைய நபருக்கு 20 மி.லி விளக்கெண்ணெய், 10 மி.லி தேன் சேர்த்துக் கலந்து கொடுக்க, மலம் கழிவதுடன், சளி இருமல் நீங்கும். சரியாகப் பசிக்காமல், மந்த வயிற்றுடன் இருப்போருக்கு ஆமணக்கு எண்ணெயை, ஓமத்தீ நீர், அல்லது சுக்குக் கஷாயத்தில் இதேபோல் கலந்து கொடுக்க மந்தம் நீங்கி, பசி உண்டாகும். சாப்பிடாத குழந்தை, மந்தம் உள்ள குழந்தை, கணச்சூட்டுடன் மெலிந்திருக்கும் குழந்தை, வாயில் அடிக்கடி வாய்ப்புண்ணுடன் உள்ள குழந்தை என எல்லோருக்கும் விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கின்றது. இருப்பினும், சித்த மருத்துவரை ஆலோசிக்காமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். இதன் மலமிளக்கித் தன்மையைச் சீராக அளவறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், சுயவைத்தியம் சரிவராது. விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டு வலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்பட்டுள்ளது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இந்தியரிடம் மட்டும் அல்லாது, சீனரிடமும், ரோமானியரிடமும், கிரேக்கரிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது.
மொத்தத்தில், விளக்கெண்ணெய் காலம் காலமாக யாரும் விலக்காத எண்ணெய்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்துக் கடை ~