Author Topic: ~ சமையலறையில் உள்ள முதலுதவி பொருட்கள் ~  (Read 324 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226806
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சமையலறையில் உள்ள முதலுதவி பொருட்கள்



சின்னச் சின்ன தொந்தரவுகளை, பாரம்பரிய மருத்துவம் மூலம், நாமே சரிசெய்துகொள்ள முடியும்.

* அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

* பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.

* தலைவலி நீங்க நொச்சி இலை அல்லது துளசி இலையை, வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மருதாணிப் பூ, நொச்சி இலைகளை, தலையணைக்குக் கீழ்வைத்துப் படுத்தாலும், அடிக்கடி வரும் தலைவலி வராது.

* தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலிக்கு, சோம்புப் பொடி, சீரகப் பொடி, பெருங்காயம், கருப்பட்டியைச் சம அளவு எடுத்து, இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடலாம். அஜீரணத்தால் ஏற்பட்ட வலியைப் போக்க, 15 மி.லி ஒமத் தண்ணீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

* செரிக்கக் கடினமான உணவைச் சாப்பிட்ட பின் வாந்தி வந்தால், மாதுளைச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து, 15 மி.லி குடிக்க, செரிக்காமல் தொந்தரவு செய்யும் உணர்வும், வாந்தி உணர்வும் நிற்கும்.