Author Topic: ~ வாழைக்காய் பொடிக்கறி ~  (Read 345 times)

Offline MysteRy

~ வாழைக்காய் பொடிக்கறி ~
« on: September 29, 2015, 08:12:58 PM »
வாழைக்காய் பொடிக்கறி



தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

மல்லி - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - கடலைப் பருப்பு - வரமிளகாய் - துருவிய

தேங்காய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் புளியை போட்டு ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புளிச்சாறு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வாழைக்காயைப் போட்டு, பாதியாக வெந்ததும், அதனை இறக்கி தோலுரித்து, துருவியோ அல்லது சிறு துண்டுகளாகவோ வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வாழைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, இறுதியில் பொடி செய்து வைத்துள்ளதை தூவி ஒருமுறை கிளறினால், வாழைக்காய் பொடிக்கறி ரெடி!!!